Latest topics
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
தேசப் பிதா
Page 1 of 1
தேசப் பிதா
இது நமது அரங்கத்து நண்பர் மூசேயின் கவிதை , அவர் புதியவர்
என்றும் அன்புடன்
தமிழ் அரங்கம் தமிழுக்காக. . .
தேசப் பிதாவே!
சின்னச் சின்னச் சிரிப்புகளால்
ஒரு ஏகாதிபத்திய
செருக்கின் சிறகொடித்தவனே!
பூமாலைக்களுக்கு ஏங்காமல்
புகழ் மலையின்
சிகரம் தொட்டவனே!
உன்னை நினைத்தபடி
என் உள்ளம் அழுகிறது.
அப்போதெல்லாம்
அந்நிய வெள்ளையனின்
துப்பாக்கி முனை
எப்போதும் உன்னை
குறி பார்த்துகொண்டிருக்கும்.
ஆனால்
உன் உயிருக்கு
உத்திரவாதம் இருந்தது.
சுதந்திர இந்தியாவில்
ஓராண்டுக்குள்
ஒரு சுதேசி துப்பாக்கியின்
மூன்று குண்டுகளால்
உன்
மூச்சுக் காற்றுக்கு
முற்றுப்புள்ளி வைத்தார்களே!
இது
முட்டாள்களின் சொர்க்கம்.
உன்னை நினைத்தபடி
என் உள்ளம் அழுகிறது.
தனிமனித தத்துவம் என்றிருந்த
அஹிம்சையை
விடுதலைப் போர்க்களத்தில்
பொதுவுடைமை ஆக்கிய
புத்தன் தேசத்தின்
புதிய வாரிசே!
இப்போது இங்கே
என்ன நடக்கிறது என்று
எப்போதாவது
எட்டி பார்த்திருக்கிறாயா?
என் பாசமுள்ள தேசப்பிதாவே!
சிரத்தையாய்
உன் சிலைகளுக்கு
மாலைபோடக் கூட
ஆளில்லை இங்கே.
புகைப்படம் எடுக்கும் போட்டியில்
உன் சிலை முகம் மறைத்தவர்கள்
ஏராளம்.
பாடமாய் சொல்லிக்கொடுத்தாலும்
காந்தீயம் படிப்பதற்கு
யாருமில்லை இங்கே.
மன்னிக்கவேண்டும் மகாத்மாவே!
இலட்சியங்களின் அமுத சுரபியே!
காந்தீயத்தில் காசு சுரக்காது
என்பதால்
உன் தத்துவப் பெட்டகம்
தலையணை ஆகிவிட்டது.
புத்தகங்களில்
புகைப்படம் ஆகிவிட்டாயே!
என் பாசமுள்ள தேசப்பிதாவே!
உன் பொன்மொழிகளின் மீது
தூசு படிந்துகிடக்கிறது.
காலப்போக்கில் அது
காணாமல் போய்விடகூடாது
என்பதற்காக
உன்னை நினைத்தபடி
என் உள்ளம் அழுகிறது.
ஏனென்றால்
இது தாகூரின் நோபல் பரிசையே
தொலைத்துவிட்ட தேசமன்றோ?
தேசப்பிதாவே
உன் பெயரிட்ட தெருவில்தான்
தேசம் காக்கும்(?)
டாஸ்மாக் மதுக் கூடம்.
உன் அழகுச் சிலை
நிழலில்தான்
போதை மகன் தூங்குகிறான்.
உன்னை நினைத்தபடி
என் உள்ளம் அழுகிறது.
உலகத்தின் முகத்தினிலே
ஒரு சோகம் தெரிகிறது.
என்றும் அன்புடன்
தமிழ் அரங்கம் தமிழுக்காக. . .
தேசப் பிதாவே!
சின்னச் சின்னச் சிரிப்புகளால்
ஒரு ஏகாதிபத்திய
செருக்கின் சிறகொடித்தவனே!
பூமாலைக்களுக்கு ஏங்காமல்
புகழ் மலையின்
சிகரம் தொட்டவனே!
உன்னை நினைத்தபடி
என் உள்ளம் அழுகிறது.
அப்போதெல்லாம்
அந்நிய வெள்ளையனின்
துப்பாக்கி முனை
எப்போதும் உன்னை
குறி பார்த்துகொண்டிருக்கும்.
ஆனால்
உன் உயிருக்கு
உத்திரவாதம் இருந்தது.
சுதந்திர இந்தியாவில்
ஓராண்டுக்குள்
ஒரு சுதேசி துப்பாக்கியின்
மூன்று குண்டுகளால்
உன்
மூச்சுக் காற்றுக்கு
முற்றுப்புள்ளி வைத்தார்களே!
இது
முட்டாள்களின் சொர்க்கம்.
உன்னை நினைத்தபடி
என் உள்ளம் அழுகிறது.
தனிமனித தத்துவம் என்றிருந்த
அஹிம்சையை
விடுதலைப் போர்க்களத்தில்
பொதுவுடைமை ஆக்கிய
புத்தன் தேசத்தின்
புதிய வாரிசே!
இப்போது இங்கே
என்ன நடக்கிறது என்று
எப்போதாவது
எட்டி பார்த்திருக்கிறாயா?
என் பாசமுள்ள தேசப்பிதாவே!
சிரத்தையாய்
உன் சிலைகளுக்கு
மாலைபோடக் கூட
ஆளில்லை இங்கே.
புகைப்படம் எடுக்கும் போட்டியில்
உன் சிலை முகம் மறைத்தவர்கள்
ஏராளம்.
பாடமாய் சொல்லிக்கொடுத்தாலும்
காந்தீயம் படிப்பதற்கு
யாருமில்லை இங்கே.
மன்னிக்கவேண்டும் மகாத்மாவே!
இலட்சியங்களின் அமுத சுரபியே!
காந்தீயத்தில் காசு சுரக்காது
என்பதால்
உன் தத்துவப் பெட்டகம்
தலையணை ஆகிவிட்டது.
புத்தகங்களில்
புகைப்படம் ஆகிவிட்டாயே!
என் பாசமுள்ள தேசப்பிதாவே!
உன் பொன்மொழிகளின் மீது
தூசு படிந்துகிடக்கிறது.
காலப்போக்கில் அது
காணாமல் போய்விடகூடாது
என்பதற்காக
உன்னை நினைத்தபடி
என் உள்ளம் அழுகிறது.
ஏனென்றால்
இது தாகூரின் நோபல் பரிசையே
தொலைத்துவிட்ட தேசமன்றோ?
தேசப்பிதாவே
உன் பெயரிட்ட தெருவில்தான்
தேசம் காக்கும்(?)
டாஸ்மாக் மதுக் கூடம்.
உன் அழகுச் சிலை
நிழலில்தான்
போதை மகன் தூங்குகிறான்.
உன்னை நினைத்தபடி
என் உள்ளம் அழுகிறது.
உலகத்தின் முகத்தினிலே
ஒரு சோகம் தெரிகிறது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» மீண்டும் வருகிறேன்
» * * * அம்மா * * *
» மதியும் விதியும் (கவிதை)
» யாதுமாகிய நீயே தாயே !
» பாசத்தாலே . . .
» விரைவில் . . .
» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
» தீபாவளி
» இது தீபாவளிக்காக . . .
» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
» நல்வாழ்த்துக்கள்
» நடிகை . . .
» தப்பித்து வந்தவனின் மரணம்.
» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
» தமிழே . . .
» தேசப் பிதா
» வணக்கம் . . . நன்றி . . .
» காத்திருப்பேன் . . .
» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்